Thursday, October 21, 2010

காதல் பிச்சை

மறக்க முடியாத உன் நினைவுகளோடும்
மறக்க முயலும் என் காதலோடும்
நித்தம் போராடுகிறேன் நான் தனியாய்
மனம் இரங்கி வாராயோ நீ என் துணையாய்

Wednesday, October 6, 2010

காதல்



மெல்லவும் முடியாமல் உமிழவும் இயலாமல்
பாதியில் நின்ற இரையால் பரிதவித்திடும் பாம்பினைப் போல்
வெளிபடுத்த இயலாமல் தவித்திடும் என் இதயம்
உன்மேல் கொண்ட காதலை

பிரிவு



மௌனமாய் கழிந்திடும் பேருந்துப் பயணங்கள்
தனிமையில் புசித்திடும் இரவு நேர உணவு
வெறுமை நிறைந்திருக்கும் வீட்டின் அறைகள்
அனைத்தும் ஞாபகப்படுத்தும் நண்பா உன் அன்பை