Friday, April 1, 2011

நம்பிக்கை இழந்த தமிழன்

என்ன அவசரமாயினும் விரையும் மந்திரிகளின் வாகனங்களுக்கு வழிகொடுத்து
போக்குவரத்து நெரிசலில் பொறுமையாய் காத்திருக்கிறார்கள் இந்நாட்டு மன்னர்கள்

மின்சாரம் இல்லாமல் ஊரே இங்கு இருளில் மூழ்கிக் கிடக்க
பார்த்து பரிகசிக்கின்றன பொதுக்கூட்டங்களில் எரியும் அணையா மின்விளக்குகள்

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுபோல்
மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கின்றனர் நம் கலியுக கர்ணன்மார்கள்

ஆட்சிகள் மாறினாலும் நாட்டில் காட்சிகள் மாறாது எனில்
எந்தன் ஓட்டு இல்லை எந்த ஐயாவுக்கும் அம்மாவுக்கும்

Thursday, February 10, 2011

தனிமையும் அதன் இனிமையும்

அலைபேசி எந்தன் ஆறாம் விரலாய் மாறிய பின்
தூக்கம் நிறைந்த இரவென்பது வெறும் கனவாய் ஆனபின்
உன் நினைவுகள் ஒன்றே என் சிந்தையென்றான பின்
தொலைந்து போனது வாழ்வின் தனிமையும் அதன் இனிமையும்

Wednesday, January 12, 2011

காதலோவியம்

என் கனவினை தீட்டி வைத்தேன் அழகான ஓர் ஓவியமாய்
அது உயிர்பெற்றெழும் கணம் ஏங்கி தவம் கிடந்தேன் பலநாளாய்
என் இன்ப நிலை பொறுவா வாழ்வின் நிஜங்கள் நெருப்பாய்
மாறி கனவினை கலைத்திட என்னுயிர் ஓவியமும் எரிந்தது சாம்பலாய்