என்ன அவசரமாயினும் விரையும் மந்திரிகளின் வாகனங்களுக்கு வழிகொடுத்து
போக்குவரத்து நெரிசலில் பொறுமையாய் காத்திருக்கிறார்கள் இந்நாட்டு மன்னர்கள்
மின்சாரம் இல்லாமல் ஊரே இங்கு இருளில் மூழ்கிக் கிடக்க
பார்த்து பரிகசிக்கின்றன பொதுக்கூட்டங்களில் எரியும் அணையா மின்விளக்குகள்
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதுபோல்
மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்கின்றனர் நம் கலியுக கர்ணன்மார்கள்
ஆட்சிகள் மாறினாலும் நாட்டில் காட்சிகள் மாறாது எனில்
எந்தன் ஓட்டு இல்லை எந்த ஐயாவுக்கும் அம்மாவுக்கும்
Welome you all
Friday, April 1, 2011
Thursday, February 10, 2011
தனிமையும் அதன் இனிமையும்
அலைபேசி எந்தன் ஆறாம் விரலாய் மாறிய பின்
தூக்கம் நிறைந்த இரவென்பது வெறும் கனவாய் ஆனபின்
உன் நினைவுகள் ஒன்றே என் சிந்தையென்றான பின்
தொலைந்து போனது வாழ்வின் தனிமையும் அதன் இனிமையும்
தூக்கம் நிறைந்த இரவென்பது வெறும் கனவாய் ஆனபின்
உன் நினைவுகள் ஒன்றே என் சிந்தையென்றான பின்
தொலைந்து போனது வாழ்வின் தனிமையும் அதன் இனிமையும்
Wednesday, January 12, 2011
காதலோவியம்
என் கனவினை தீட்டி வைத்தேன் அழகான ஓர் ஓவியமாய்
அது உயிர்பெற்றெழும் கணம் ஏங்கி தவம் கிடந்தேன் பலநாளாய்
என் இன்ப நிலை பொறுவா வாழ்வின் நிஜங்கள் நெருப்பாய்
மாறி கனவினை கலைத்திட என்னுயிர் ஓவியமும் எரிந்தது சாம்பலாய்
அது உயிர்பெற்றெழும் கணம் ஏங்கி தவம் கிடந்தேன் பலநாளாய்
என் இன்ப நிலை பொறுவா வாழ்வின் நிஜங்கள் நெருப்பாய்
மாறி கனவினை கலைத்திட என்னுயிர் ஓவியமும் எரிந்தது சாம்பலாய்
Thursday, December 9, 2010
மன்னிப்பு
சிறு வயதில் நான் ஆர்வமாய் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்
அலுக்காமல் பதிலுரைத்த என் தாய் தந்தையின் பொறுமை
கணினி தொடர்பாய் என் தாய் கேட்கும் கேள்விகளுக்கு
நான் விளக்கமளிக்கும் போது மட்டும் இல்லாமல் போனதுவேன்
என் தவறை உணர்கிறேன் நான் முதல் முறையாய்
அலுக்காமல் பதிலுரைத்த என் தாய் தந்தையின் பொறுமை
கணினி தொடர்பாய் என் தாய் கேட்கும் கேள்விகளுக்கு
நான் விளக்கமளிக்கும் போது மட்டும் இல்லாமல் போனதுவேன்
என் தவறை உணர்கிறேன் நான் முதல் முறையாய்
அன்பு
காதல் கொண்ட மனமோ அவளுடன் வாழ்ந்திட துடிக்கும்
அன்பு கொண்ட மனமோ அவள் மகிழ்வினை விரும்பும்
என் பிரிவே அவள் மகிழ்வெனில் காதலை வீழ்த்தி
என்றும் அவள் மேல் கொண்ட அன்பே ஜெயிக்கட்டும்
அன்பு கொண்ட மனமோ அவள் மகிழ்வினை விரும்பும்
என் பிரிவே அவள் மகிழ்வெனில் காதலை வீழ்த்தி
என்றும் அவள் மேல் கொண்ட அன்பே ஜெயிக்கட்டும்
Thursday, October 21, 2010
காதல் பிச்சை
மறக்க முடியாத உன் நினைவுகளோடும்
மறக்க முயலும் என் காதலோடும்
நித்தம் போராடுகிறேன் நான் தனியாய்
மனம் இரங்கி வாராயோ நீ என் துணையாய்
மறக்க முயலும் என் காதலோடும்
நித்தம் போராடுகிறேன் நான் தனியாய்
மனம் இரங்கி வாராயோ நீ என் துணையாய்
Wednesday, October 6, 2010
காதல்
Subscribe to:
Posts (Atom)